சென்னை மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய என்ன நடவடிக்கை?

0 448

சென்னை நகர மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வேலூரில் கால்வாயில் கழிவுநீர் கலப்பது தொடர்பான வழக்கு விசாரணையின்போது கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட இடங்களில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகளின் தற்போதைய நிலை என்ன என்றும், எத்தனை ஆலைகள் செயல்படுகின்றன? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அவற்றின் மூலம் எவ்வளவு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டதால் மக்கள் அவதிப்படுவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் வேறு எந்தெந்த வழிகளில் தண்ணீர் பெறப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினர் அது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments