சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மேற்கு வங்க பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்

0 3292

சென்னை, பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட  ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பெங்களூருவில் பொறியாளராக பணிப்புரிந்து வரும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 30 வயதான பெண், விபத்தில் கால் மூட்டில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக அறுவை கிகிச்சைக்காக கடந்த 4ஆம் தேதி முதல் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் மயக்க ஊசி போடப்பட்டு, காலில் எக்சிரே எடுக்க அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அப்போது லேப் டெக்னிஷியன் டில்லி பாபு, மயக்கத்தில் இருந்தபோது தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, மயக்கம் தெளிந்த பின் மருத்துவர்களிடம் அந்த பெண் முறையிட்டுள்ளார். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததோடு, சென்னை காவல் துறையிடம் மின்னஞ்சல் மூலமும் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து துரைப்பாக்கம் போலீசார், மருத்துவமனைக்கு சென்று விசாரித்த போது, அந்த பெண்ணுக்கு மனநலம் சரியில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பின்னர் நோயாளிகள் குறிப்பின் மூலம் அந்த பெண் அறுவை சிகிச்சைக்காக மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து, அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அப்பெண் தனக்கு நேர்ந்தது குறித்து கூறியதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், லேப் டெக்னிஷியன் டில்லி பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments