விடுதலையான கைதிகளை வரவேற்க தேவாலயத்தில் சிறப்பு தொழுகை

0 296

நிகாரகுவாவில், அண்மையில் விடுவிக்கப்பட்ட கைதிகளை வரவேற்க மசாயா தேவாலாயத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

நிகாரகுவாவில், அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாக பத்திரிகையாளர், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கடந்த ஓராண்டு காலமாக சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், அந்நாட்டு அதிபர் டேனியல் ஓர்டேகா((Daniel Ortega)) தலைமையிலான நிர்வாகத்துடன் எதிர்கட்சி நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி கைதிகள் மீண்டும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையுடன், கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இரு நாட்களாக விடுவிக்கப்பட்ட 106 பேரையும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆரத்தழுவி வரவேற்ற நிலையில், மசாயாவில் உள்ள தேவாலயத்தில் அவர்களுக்கென சிறப்பு தொழுகை நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments