அண்ணனை கல்லால் அடித்து கொலை செய்த சகோதரர் குடும்பத்தினர்

0 332

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே தோட்டத்திற்கு வேலி அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது சகோதரர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

துரைசாமிபுரத்தை சேர்ந்த பால்ராஜ் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் அருகேயுள்ள தோட்டத்திலிருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி, குழாய் பதித்து தண்ணீர் கொண்டு சென்றுள்ளார்.

இதற்காக இரு தோட்டங்களுக்கு இடையில் உள்ள அவரது சகோதரர் பொன்னையாவின் தோட்ட வேலி அகற்றப்பட்டுள்ளது. அந்த வேலியை மீண்டும் அமைத்து தருமாறு பொன்னையா கேட்டபோது அவருக்கும், பால்ராஜ் குடும்பத்தினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் வாக்குவாதம் முற்றி பால்ராஜின் மகள் சத்யா, மருமகன் செல்வம் ஆகியோர் பொன்னையா மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து பால்ராஜ், அவரது மனைவி சுருளியம்மாள், மகள் சத்யா, மருமகன் செல்வம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT