தந்தையுடன் கல்லூரி சென்ற மாணவி விபத்தில் பலி

0 778

திருவள்ளூரில், இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், தந்தையுடன் சென்ற கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

பூண்டி அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசனின் மகள் கீர்த்திகா. திருவள்ளூர் அருகேவுள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்த கீர்த்திகா, கல்லூரி செல்வதற்காக தந்தை ஓட்டிய இருசக்கர வாகனத்தில் பின் அமர்ந்து, மேட்டுப்பாளையத்திலிருந்து திருவள்ளூர் நோக்கி சென்றார்.

அவர்கள் புல்லரம்பாக்கம் கிருஷ்ணா கால்வாய் அருகே வந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று, அவர்கள் வாகனம் மீது மோதியது. இதில் கீர்த்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது தந்தை பலத்த காயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த புல்லரம்பாக்கம் போலீசார், வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய இளைஞர் விஷ்வநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments