வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கி தயாரித்த இருவர் கைது

0 160

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஓசூர் அருகே நாட்டுத்துப்பாக்கி தயாரித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உணிசே நத்தம் கிராமத்தை யொட்டியுள்ள வனப்பகுதியினுள் சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கிகள் தயாரிப்பில் சிலர் ஈடுபடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கிருஷ்ணகிரி நக்சல் ஒழிப்பு போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த நஞ்சாச்சாரி மற்றும் நெலமாறு கிராமத்தைச் சேர்ந்த உபேந்திரா ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து  துப்பாக்கிகள் தயாரிக்க தேவையான உதிரி பாகங்களை கைப்பற்றி தளி காவல்நிலையத்தில் ஒப்படைத்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT