சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சாலையில் திடீர் பள்ளம்

0 362

சென்னையில் அடையாறு அருகே முக்கிய சாலையில் திடீரென பெரும் பள்ளம் உருவானதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

அடையாறு, கிண்டி இடையே உள்ள மத்திய கைலாஷ் பகுதியின் முக்கியச் சாலையில் நள்ளிரவில் திடீரென பெரும் பள்ளம் ஏற்பட்டது. 15 அடி ஆழமுள்ள இந்தப் பள்ளம் இரவு நேரத்தில் ஏற்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் தெரிவித்தும் காலை வரை அந்த இடத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதே மத்திய கைலாஷ் பகுதியில் 20 நாட்களுக்கு முன்னர் இதுபோன்ற பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments