ட்ரோன்களைச் செயலிழக்கச் செய்யும் நவீனரக துப்பாக்கி கண்டுபிடிப்பு

0 718

உரிய அனுமதியின்றி பறக்கவிடப்படும் ட்ரோன்களைச் செயலிழக்கச் செய்யும் நவீன கதிர்வீச்சுத் துப்பாக்கியை ஆஸ்திரேலியா உருவாக்கி உள்ளது.

தடை செய்யப்பட்ட இடங்களைப் படம்பிடிப்பது, சிறிய ரக குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்துவது என ட்ரோன்களின் பயன்பாடு திசை மாறிச் செல்லும் வேளையில் வெகுதூரத்தில் இருந்து வரும் ட்ரோன்களையும் செயலிழக்கச் செய்யும் நவீனரக துப்பாக்கியை ஆஸ்திரேலிய ராணுவத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 ஆயிரம் அடி தூரத்தில் வரும் ட்ரோனையும் குறிப்பிட்ட துப்பாக்கி மூலம் குறிபார்த்து பின்னர் அதிலிருந்து ஒளிக்கற்றையைச் செலுத்துவதன் மூலம் அந்த ட்ரோன் செயலிழந்து விழுந்து விடுகிறது.

இந்த வகை துப்பாக்கிகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments