ஏமன் அதிபருக்கு ஆதரவாக ஹவுத்தி படையைத் தாக்கும் சவுதி

0 299

ஹைவுத்தி படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சவுதியைச் சேர்ந்த 26 பேர் படுகாயமடைந்தனர்.

ஏமன் நாட்டில் அதிபருக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சவுதி அரேபியாவுக்கு ஹவுத்தி படையினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால் அவ்வப்போது அவர்கள் சவுதி மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சவுதயில் உள்ள அபா விமானநிலையத்தைக் குறிவைத்து ஹவுத்திப் படையினர் ஏவுகணைகளை வீசினர். இந்த ஏவுகணை வெடித்துச் சிதறியதில் 26 பேர் படுகாயமடைந்தனர்.

ஏமன் நாட்டு எல்லையில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகவும், அதனைத் தாங்கள் முறியடித்து விட்டதாகவும் சவுதி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments