2100 விவசாயிகளின் கடனை செலுத்திய அமிதாப் பச்சன்

0 1318

பீகாரைச் சேர்ந்த 2 ஆயிரத்து 100 விவசாயிகளின் கடன் தொகையை நடிகர் அமிதாப் பச்சன் தமது சொந்த வருமானத்தில் இருந்து செலுத்தியுள்ளார்.

விவசாயிகளின் கடன் சுமையை ஏற்பதாக அறிவித்திருந்த நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ள 2 ஆயிரத்து 100 விவசாயிகளின் வங்கிக் கடன்களை மகள் ஸ்வேதா, மகன் அபிசேக் பச்சன் மூலம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் ஆயிரத்து 398 விவசாயிகளின் கடன் தொகையையும் மகாராஷ்ட்ராவில் 350 விவசாயிகளின் கடன் தொகையையும் அமிதாப் பச்சன் கொடுத்துள்ளார் . புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கவும் அமிதாப் திட்டமிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments