ஜாகிர் நாயக்கை ஒப்படைக்கும்படி மலேசிய அரசுக்கு இந்தியா கோரிக்கை

0 1571

பகையைத் தூண்டும் பேச்சுகளுக்காக இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ஜாகிர் நாயக்கை அனுப்பி வைக்கும்படி மலேசிய அரசுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலர் ரவீஷ்குமார், இதுதொடர்பாக மலேசிய அரசுக்கு முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து வலியுறுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான பகையைத் தூண்டும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜாகிர் நாயக் 2016ம் ஆண்டு மலேசியா குடியுரிமை பெற்று இந்தியாவை விட்டு வெளியேறினார்.

தமக்கு நியாயம் கிடைக்காது என்றும், உச்சநீதிமன்றம் உறுதியளித்தால் இந்தியா திரும்பத் தயார் என்றும் அவர் கூறியிருந்தார். ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்புவதை மறுப்பதற்கான உரிமை தங்களுக்கு இருப்பதாக மலேசியா பிரதமர் மஹாத்தீர் முகமது தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments