நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கலாகிறது முத்தலாக் தடை மசோதா

0 814

முத்தலாக் தடை சட்டத்தை மீண்டும் நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறையை ரத்து செய்வதற்கான புதிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து புதிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முஸ்லீம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக கொண்டு வரப்பட்ட இச்சட்ட மசோதா கடந்த மக்களவையில் நிறைவேறிய போதும் மாநிலங்களவையால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை பிறப்பித்து இது அவசர சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் 7 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான மத்திய கல்வி நிறுவனங்கள் மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மேலும் ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை ஜூலை 3ம் தேதி தொடங்கி மேலும் ஆறுமாதங்களுக்கு நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆதார் அட்டையை வங்கிக் கணக்குத் தொடங்கவும், தொலைத் தொடர்பு சேவையைப் பயன்படுத்தவும் வாடிக்கையாளர்கள் தாமாக முன்வந்து ஆதாரமாக சமர்ப்பிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலையும் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் வழங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments