ஷிகர் தவான் காயம் அடைந்த நிலையில் ரிஷப் பந்திற்கு அழைப்பு

0 2344

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பந்த் இணைய உள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டித் தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டத்தில் ஆடிய போது இந்திய வீரர் ஷிகர் தவான் காயமடைந்தார். அவரது இடது கை பெருவிரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் அடுத்த மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதனை அடுத்து ஷிகர் தாவனுக்கு பதிலாக விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.ஷிகர் தவான் 12 நாட்கள் வரை சிகிச்சை பெற வேண்டியது உள்ளதால், அதுவரை காத்திருப்பதாகவும், அதன் பின்னரும் அவர் விளையாட தகுதி பெறாவிட்டால் ரிஷப் பந்த் அணியில் இணைந்து விளையாடுவார் என்றும்  அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments