ஜம்மு காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசு தலைவர் ஆட்சி

0 473

ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பாஜக - மக்கள் ஜனநாயக கூட்டணி முறிந்ததை அடுத்து, குடியரசுத் தலைவர் ஆட்சி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமல்படுத்தப்பட்டது. அமர்நாத் யாத்திரை முடிந்த பின்னர் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் 6 மாத கால குடியரசுத் தலைவர் ஆட்சி நிறைவடைவதை முன்னிட்டு, ஆளுநர் சத்யபால்மாலிக்கின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் ஆட்சிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முத்தலாக் முறையை தடை செய்வதற்கு புதிய மசோதாவை தாக்கல் செய்யவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments