ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை இஸ்ரேல் அனுமதிக்காது

0 614

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகூ தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் பொய் சொல்லி வருவதாகவும், இஸ்ரேலை அழிக்க ஈரான் நாள்தோறும் யுரேனியம் உற்பத்தியை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். ஈரான் தனது ராணுவத்தை பயன்படுத்தி சிரியாவை ஆக்கிரமிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், உலக நாடுகளை அச்சுறுத்தும் ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை, இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது என தெரிவித்தார்.

முன்னதாக, ஈரானை கண்டித்து, அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை பிற நாடுகள் நிறுத்திக்கொள்ள அமெரிக்கா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT