பார்கவுன்சில் தலைவரான 2 நாட்களில் பெண் வழக்கறிஞர் சுட்டுக் கொலை

0 446

உத்தரப்பிரதேசத்தில் பார்கவுன்சில் தலைவராகத் தேர்வான பெண் இரண்டே நாட்களில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

தர்வேஷ் யாதவ் உத்தரப்பிரதேச பார்கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் தலைவர் தர்வேஷ் யாதவ் ஆவார். அவரை, புதனன்று மாலை ஆக்ரா நீதிமன்ற வளாகத்தில் வைத்து, மணிஷ் சர்மா என்ற வழக்கறிஞர் 3 முறை துப்பாக்கிளால் சுடப்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தர்வேஷ் யாதவை சுட்டுக் கொன்ற உடனேயே வழக்கறிஞர் மணிஷ் சர்மாவும் தன்னைத் தானே சுட்டு கொண்டதாக கூறப்படுகிறது. பார் கவுன்சில் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments