83 படத்தில் ரன்வீர்சிங்குடன் இணைகிறார் தீபிகா படுகோன்

0 462

1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையப்படுத்தி உருவாக்கப்படும் 83 என்ற படத்தில் கபில்தேவ் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்க இருக்கிறார்.

கபீர்கான் இயக்கும் அந்த படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர்சிங் நடித்து வரும் நிலையில், தற்போது அவரது மனைவி தீபிகாவும் இணைந்துள்ளார். தனது மனைவி கையில் கிரிக்கெட் பேட்டை கொடுத்தால் என்ன நடக்கும் என்பதைக் காட்ட வேடிக்கையான வீடியோவையும் ரன்வீர்சிங் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.


அடுத்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி 83 படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. திருமணத்திற்குப் பின் ரன்வீர்சிங் - தீபிகா இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments