திருட்டு வாகனத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்

0 395

சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சியாம்பாபு, மதுரவாயல்-வானகரம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஸ்கூட்டரில் வந்த நபர் ஒருவர், அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் காவல்துறையினர் அந்த நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் திருவேற்காடு பகுதியில் உள்ள முட்புதரில் நபர் ஒருவர் மதுபோதையில் விழுந்து கிடந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். 

அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது, ஆயிரம் விளக்கை சேர்ந்த வெங்கடேசன் என்பதும், வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை திருடி வந்ததும் தெரியவந்தது.

பின்னர் சியாம்பாபுவிடம் செல்போனை பறித்துச் சென்ற நிலையில், மதுபோதையில் வாகனத்தை ஓட்ட முடியாததால், முட்புதரில் விழுந்து கிடந்ததும் தெரியவந்தது. இதனிடையே அவர் வாகனத்தை திருடும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments