தெருவிற்குள் பைக் ரேஸ்: இளைஞர்களுக்கு அடி உதை..! செல்பியால் செம கவனிப்பு

0 10287

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த லட்சுமி புரத்தில் தெருவிற்குள் அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர்களை கண்டித்து நடந்த சாலை மறியலை செல்போனில் படம் பிடித்த 3 இளைஞர்களை போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனிமாவட்டம் பெரியகுளம் அடுத்த லட்சுமி புரம் சருத்துபட்டியில் தெருவிற்குள் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றதை தட்டிக்கேட்ட முரளி என்பவர் தாக்கப்பட்டார். முரளியை தாக்கிய சம்பந்தப்பட்ட இளைஞர்களை கண்டித்தும், உடனடியாக அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் ஒரு பிரிவினர் ஆண்களும் பெண்களுமாக 500க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் தலைவர்கள் காவல்துறையினரிடம் தங்கள் வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து தெலுங்கில் பேசினர்

இதனை அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற எதிர் பிரிவை சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் செல்போனில் படம் பிடித்ததுடன் போராட்டத்தில் இருப்பது போல செல்பி எடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

அடுத்த நிமிடம் போராட்டத்தில் ஈடுபட்ட ஒட்டு மொத்த கூட்டமும் அந்த இளைஞர்களுக்கு எதிராக திரும்பியது. இளைஞர்கள் 3 பேரையும் விரட்டினர்.

அவர்களை விரட்டிச்சென்ற பொதுமக்கள் அந்த இளைஞர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்

போலீசார் அவர்களை மீட்டு அழைத்து செல்ல முயன்ற போதும் ஆத்திரத்தில் பெண்களும் அடிக்க பாய்ந்தனர்

இதற்கிடையே செல்போனில் படம் பிடித்த ஒருவர் ஹெல்மெட்டுடன் நழுவ முயன்று கூட்டத்தினரிடம் சிக்கினார் அவரையும் சரமாரியாக கவனித்தனர்

இந்த தாக்குதல் சம்பவத்தில் இருந்து 3 பேரையும் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்ட காவல்துறையினர் பலத்த எதிர்ப்புக்கிடையே அவர்கள் 3 பேரையும் பத்திரமாக மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இல்லையெனில் அவர்கள் 3 பேரும் அடித்தே கொல்லப்பட்டு இருப்பார்கள்..!

கிராமப்புறங்களில் அதிவேக பைக் வைத்திருக்கும் இளைஞர்கள், இளம் பெண்களை கவர்வதாக நினைத்து குழந்தைகள் ஓடி விளையாடும் தெருவிற்குள் அதிவேகமாக சென்று விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்று விடுவதாக கூறப்படுகின்றது. இதனை எச்சரிக்கும் நபர்களை வீடு புகுந்து தாக்கியதால்,அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு பாடம் புகட்டவே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், தங்களது போரட்டத்தில் புகுந்து செல்போனில் படம் பிடித்து உளவு பார்த்து சொன்னதால் 3 இளைஞர்களையும் தாக்கியதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் பைக் வைத்திருக்கும் இளைஞர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொண்டால் போதும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments