காமராஜர் பல்கலைக்கழகம் ரூ.1000 கோடி நிதிக்கு தகுதிபெற்றுள்ளதாக துணைவேந்தர் தகவல்

0 421

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், வர்ஷா என்ற திருநங்கைக்கு முதுநிலை படிப்பில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, மாணவர் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

மத்திய NIRI தர வரிசையில், பல்கலைக்கழகம் 54வது இடத்திலிருந்து 45 வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இதன் மூலம் மத்திய அரசு வழங்கக்கூடிய 1000 கோடி ரூபாய் நிதிக்கு பல்கலைக்கழகம் தகுதிபெற்றுள்ளதாக தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக வர்ஷா என்ற திருநங்கைக்கு முதுநிலை நாட்டுப்புறவியல் படிப்பில் சேர அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT