குடிநீர் பற்றாக்குறையை போக்க தனது விவசாய கிணற்று நீரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கிய விவசாயி

0 350

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் சிரமப்படுவதை கண்ட விவசாயி ஒருவர் தனது விவசாய கிணற்று நீரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளார்.

அழககவுண்டம்பட்டியை சேர்ந்த விவசாயி பழனிசாமிக்கு, மானாங்குன்றத்தில் விவசாய தோட்டம் உள்ளது.

இங்கு கடந்த 7 மாதங்களாக நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீரை பிடித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்களின் குடிநீர் தேவையை உணர்ந்த விவசாயி பழனிசாமி, தனது விவசாய கிணற்று நீரை பொதுமக்கள் பிடித்து செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.

சுற்றுவட்டாரத்தில் இருந்து வந்து குடங்களில் தண்ணீரை பிடிக்கும் பொதுமக்கள் மிதிவண்டியிலும் இருசக்கர வாகனத்திலும் கொண்டு செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT