விபத்தில் சிக்கி மலைப் பகுதியில் நொறுங்கி கிடங்கும் விமானம்

0 1201

இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கி கிடக்கும் மலைப் பகுதியில் மீட்பு பணிக்காக 15 மலையேற்ற வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் அசாமில் இருந்து 13 பேருடன் சென்ற ஏஎன் 32 ரக விமானம் விபத்துக்குள்ளாகி, அருணாச்சலப்பிரதேசத்தின் சியாங் மாவட்டத்திற்குட்பட்ட சுமார் 12 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி கிடப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. மேகமூட்டம் காரணமாக மலையில் விமானம் மோதியிருக்கலாம் என கூறப்படுகிறது.

விமான பாகங்கள் சிதறி கிடக்கும் இடத்திற்கு ஹெலிகாப்டர் செல்ல முடியாத நிலை இருப்பதால், ராணுவம், விமானப்படையை சேர்ந்த 13 பேர் மற்றும் பொதுமக்களில் 2 பேர் மொத்தம் 15 மலையேற்ற வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்த இடத்தின் அருகே ஹெலிகாப்டரில் கொண்டு சென்று அவர்கள் இறக்கி விடப்பட்டனர். தேவையான உபகரணங்களுடன் விபத்து நிகழ்ந்த இடத்தை நோக்கி அவர்கள் செல்வதாகவும், சிலர் ஏற்கனவே அங்கு சென்றடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments