டெல்லி ஜே.என்.யூ பல்கலையின் உயரிய முன்னாள் மாணவர்கள்

0 598

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோருக்கு உயரிய முன்னாள் மாணவர்கள் என்ற விருதை வழங்க டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இந்தப் பல்கலைக்கழகம் சார்பில்  ஆண்டுதோறும் சிறந்த முன்னாள் மாணவர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த ஆண்டுக்கான உயரிய மாணவர்கள் விருதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வரும் ஆகஸ்ட் மாதம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments