கடன் தொகைக்காக துணி வியாபாரியை கடத்திய கும்பல்

0 293

சென்னை வேளச்சேரியில் கடன் தொகைக்காக துணி வியாபாரியை கடத்திய அமமுக நிர்வாகிகள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

மண்ணடியை சேர்ந்த துணி வியாபாரியான ஷேக் ஜான், வேளச்சேரியை சேர்ந்த அமமுக நிர்வாகி பாஸ்கரன் என்பவரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

முழு கடனையும் ஷேக் ஜான் கொடுத்து விட்டதாகக் கூறப்படும் நிலையில், கூடுதல் பணம் கேட்டு கடந்த 10ஆம் தேதி அவரை, பாஸ்கரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தியதாகவும், கூடுதலாக 2 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஷேக் ஜானை மீட்ட போலீசார், அமமுக நிர்வாகிகளான பாஸ்கரன், ஏழுமலை உள்பட 8 பேரை கைது செய்தனர். காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவர்களை பார்க்கச் சென்ற வழக்கறிஞர்களுக்கும் போலீஸ் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments