வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ளாவிட்டால் சிறை தண்டனை

0 1026

வயதான பெற்றோரை, அவர்களது அந்திமகாலத்தில், கவனிக்காமல் கைவிடும் மகன் அல்லது மகள்களுக்கு சிறை தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவிற்கு, முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதற்கான பரிந்துரையை பீகார் மாநில சமூகநலத்துறை அமைச்சகம் அளித்தது. தங்களது பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரிடம் இருந்து புகார்கள் வரப்பெற்றால், பிள்ளைகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வகை செய்யும் விதமாக, சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments