இடைத்தேர்தல் செலவை வசந்தகுமாரிடம் வசூலிக்கக் கோரி வழக்கு

0 1844

நாங்குநேரி இடைத்தேர்தல் செலவை அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமாரிடம் வசூலிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற வசந்தகுமார், நாங்குநேரி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் இடைத் தேர்தல் நடைபெறவிருப்பதாக மனுதாரர் தெரிவித்திருந்தார்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசுக்கு கோடிக்காணக்கான ரூபாய் செலவு ஏற்படுவதாகவும், ஏற்கனவே தமிழகத்துக்கு 45 ஆயிரத்து 119 கோடி ரூபாய் கடன் உள்ள நிலையில் இடைத்தேர்தலால் அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

நாங்குநேரி இடைத் தேர்தலுக்கு காரணமான வசந்தகுமாரிடம் செலவை வசூலிக்க உத்தரவிடவும் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT