கஞ்சா விற்பனை செய்த போலி செய்தியாளர்

0 324

சென்னை பள்ளிக்கரணையில் கஞ்சா விற்பனை செய்து வந்த போலி செய்தியாளர் கைது செய்யப்பட்டு 950 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த  பெரும்பாக்கம் எழில் நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சரவணன் என்ற நபரையும் அவனது கள்ள காதலி மஞ்சுளாவையும் கைது செய்தனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து 950 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் கைதான சரவணன் நமது கோட்டை என்ற பெயரில் போலி பத்திரிகை அடையாள அட்டை தயாரித்து வைத்துக்கொண்டு பலரிடம் மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT