டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு

0 844

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இங்கிலாந்தின் டவுண்டன்((Tounton)) கவுண்டி மைதானத்தில் நடக்கும் இன்றைய லீக் போட்டியில்  டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது பந்துவீச்சை தேர்வு செய்தார். 

பாகிஸ்தான் அணியில் ஷதப் ((shadab)) கானுக்கு பதிலாக ஷஹீன்((shaheen))அப்ரிடி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோனிஸ் காயத்தால் இன்றைய போட்டியில் இருந்து விலகி உள்ளதால், அவருக்கு பதிலாக ஷான் மார்ஷும், ஆடம் ஸம்பாவுக்கு பதிலாக கேன் ரிச்சர்ட்சன் அணியில் இணைந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் களமிறங்கி நிதானமான விளையாடினர்.

பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ரியாசுதின் மறைவையொட்டி, இரங்கல் தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments