டிக் டாக் மோகம் இளம்பெண் விபரீத முடிவு

0 11925

டிக் டாக்கிலேயே மூழ்கிக் கிடந்ததை வெளிநாட்டில் இருக்கும் கணவன் கண்டித்ததால், பெரம்பலூரில் பெண் ஒருவர் பூச்சிக் கொல்லி மருந்து குடிப்பதை டிக் டாக்கில் பதிவேற்றம் செய்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம் சீராநத்தத்தைச் சேர்ந்த பழனிவேலு என்பவரின் மனைவி அனிதா. இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, ஒரு மகனும், மகளும் உள்ளனர்..

கிராமத்தில் விவசாயம் செய்து வந்த பழனிவேலு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்றார். இதற்கிடையில் டிக் டாக் மீது அனிதாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தனது செல்போனில் டிக் டாக்கை பதிவிறக்கம் செய்து வைத்து அவர் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

எந்நேரமும் அனிதா டிக் டாக்கிலேயே மூழ்கிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பழனிவேலுவிடம் உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். இதை அடுத்து பழனிவேலு தனது மனைவியைக் கண்டித்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த மகன் கீழே விழுந்து காயமுற்ற தகவல் கேட்டு ஆத்திரம் அடைந்த பழனிவேலு அனிதாவை கடுமையாக வசைபாடியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அனிதா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தான் தற்கொலை செய்து கொள்வதை டிக் டாக்கிலேயே அவர் பதிவு செய்து வைத்தார்.

இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு புறம் கூறப்பட்டாலும், வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதித்து அனுப்பி வைத்த பணத்தை அனிதா கணக்கு வழக்கின்றி செலவு செய்ததும் விபரீதத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments