பிரதமர் மோடி பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தப் போவதில்லை

0 2715

பிரதமர் நரந்திரமோடி கிர்கிஸ்தான் செல்ல பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தப் போவதில்லை என வெளியுறவு அமைச்சகம் தெரித்துள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி பாலக்கோட்டில் ஜெய்ஷ் இ முகமது முகாம் மீதான இந்திய விமானப் படைத் தாக்குதலை அடுத்து தனது வான்வழிகளை பாகிஸ்தான் மூடியது. இந்நிலையில் வரும் 13, 14-ஆம் தேதிகளில் கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் ((Bishkek)) நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி செல்கிறார். அவரது விமானத்தை பாகிஸ்தான் வழியாக அனுமதிக்க இந்தியா சார்பில கோரப்பட்டது.

அதற்கு ஒப்புக் கொண்ட பாகிஸ்தான், இந்தியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க கோரியது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் பிரதமர் மோடி கிர்கிஸ்தான் செல்ல பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தப் போவதில்லை என்றும் ஓமன், ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments