காதலால் சிறுமி கடத்தல்? இளைஞன் கொலை

0 3501

ஞ்சாவூரில், 17 வயது சிறுமியைக் காதலித்து கடத்திச் சென்றதாகக் கூறப்பட்ட இளைஞன், ஆற்றங்கரையோரம் வெட்டிக் கொல்லப்பட்டுக் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் இலுப்பக்கோரையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, பக்கத்துக் கிராமமான மணலூரைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இருவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெவ்வேறு பிரிவினர் என்று சொல்லப்படுகிறது. அந்தச் சிறுமியை கடந்த 8ஆம் தேதி பிரசாந்த் கடத்திச் சென்று விட்டதாகவும், இதுகுறித்து சிறுமியின் தந்தை அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான விசாரணையில், அந்தச் சிறுமியை, பிரசாந்த் பனவெளியில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை அடுத்து அங்கு சென்ற உறவினர்கள் நேற்று சிறுமியை மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வெண்ணாறு கரையோரம் முட்புதரில் பிரசாந்த் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது வாய் துணியால் கட்டப்பட்டு இருந்தது.

கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்தன. இதுகுறித்து நடுக்காவேரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் பிரசாந்தின் உடலை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியின் உறவினர்களுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ரனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments