மேற்குவங்க மாநிலத்தில் ஜூனியர் மருத்துவர்களின் போராட்டம் தீவிரம்

0 360

மேற்கு வங்க மாநிலத்தில், இன்று காலை முதல் மருத்துவர்கள் மேற்கொண்டிருக்கும் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால், ஆயிரக்கணக்கான நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அண்மையில் நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள், மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர். இதற்கு கண்டனம் தெரிவித்து, ஜூனியர் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர்.

இன்று காலை 9 மணி முதல், இரவு 9 மணி வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கும் அவர்கள், அவரவர் பணியாற்றும் மருத்துவமனை வளாகங்களிலேயே போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஜூனியர் மருத்துவர்களின் போராட்டத்தால், கொல்கத்தா உட்பட மேற்குவங்க மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது முற்றாக முடங்கியது.

இதனால், மருத்துவமனைக்கு வந்துள்ள நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments