கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை

0 821

கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, நிர்வாகிகள், தொண்டர்களை அதிமுக தலைமை எச்சரித்துள்ளது. 

அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் மட்டுமே, கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி, கருத்து தெரிவிக்க உரிமை பெற்றவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

தலைமைக் கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை, எந்த ஒரு ஊடகத்திலும், பத்திரிக்கையிலும், அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக் ககுறித்து கருத்துத் தெரிவிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்றவர்கள் யாரும், பத்திரிக்கைகளிலோ, ஊடகங்களிலோ, தங்கள் கருத்துகளை, அதிமுகவின் கருத்துகளாக தெரிவிக்க கூடாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை மீறி, கருத்து தெரிவிக்க முனைபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments