கடலுக்குச் செல்லத் தயாராகி வரும் மீனவர்கள்

0 237

60 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிவடையுள்ள நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, துத்துக்குடி, நாகை, தஞ்சை, சென்னை,திருவள்ளுர் உட்பட தமிழகத்தின் 13 கிழக்கு கடற்கரை மாவட்டங்களில் ஏப்ரல் 15-ல் தொடங்கிய தடைக்காலம் வரும் 14-ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் 800 விசைபடகுகள் மீன்பிடிக்கச் செல்லத் தயாராக உள்ளன.

ஆயிரக்கணக்கான மீன்பிடி தொழிலாளர்கள் டீசல், ஐஸ்கட்டிகள், மீன்பிடி உபகரணங்களை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று உரிய ஆவணங்களுடன் மீன்பிடிக்க செல்லவும் எல்லை தாண்டிச் செல்லக்கூடாது என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT