பட்டுப் புடவைகள் திருட டெல்லியில் இருந்து காரில் வந்த கும்பல்

0 5777

டெல்லியில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கடைகளில் விலையுர்ந்த பட்டுபுடவைகளை திருடிவந்த பெண்கள் உள்ளிட்டவர்கள் அடங்கிய  வட மாநில கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் பிரபல துணிக்கடை ஒன்றில் பட்டுபுடவை வாங்குவதற்காக பார்வையிடுவது போல நடித்து பட்டு புடவைகளை திருடிய 4 பெண்கள் உள்ளிட்ட 6 பேரை கடை ஊழியர்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களை கைது செய்து பாண்டிபஜார் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் பல பிரபலமான கடைகளில் விலையுர்ந்த பட்டுபுடவைகளை திருடியது தெரியவந்தது.

இதற்காக டெல்லியில் இருந்து கார் மூலம் அவர்கள் சென்னைக்கு வந்ததும் தெரியவந்தது. அந்தக் கும்பலிடம் இருந்து விலை உயர்ந்த் பட்டுப்புடவைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments