ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு மக்களவை துணை சபாநாயகர் பதவி ?

0 2814

மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க பா.ஜ.க. முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான ஜெகன்மோகன்ரெட்டியை நேற்று சந்தித்துப் பேசினார். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பெருமளவிலான சிறுபான்மையினரின் ஓட்டுகளும் தனது வெற்றிக்கு காரணமாக உள்ள நிலையில் பா.ஜ.க.வின் வாய்ப்பை ஏற்க ஜெகன்மோகன் ரெட்டி தயங்குவதாகக் கூறப்படுகிறது.

மக்களவைக் கூட்டத் தொடர் வரும் 17-ஆம் தேதி தொடங்கும் நிலையில் வரும் 15-ஆம் தேதி நிதி ஆயோக் கூட்டத்துக்காக டெல்லி செல்லவுள்ள ஜெகன்மோகன் ரெட்டி இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT