போலி ஆவணங்கள் அடிப்படையில் ரூ.27.6 கோடி கடன் கொடுத்து மோசடி

0 1385

போலி ஆவணங்களின் அடிப்படையில் கடன் கொடுத்து 27.6 கோடி ரூபாய் மோசடி செய்ததாக இந்தியன் வங்கியின் போரூர் கிளை முன்னாள் மேலாளர் உள்பட 59 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்தியன் வங்கியின் போரூர் கிளை தலைமை மேலாளராக இருந்தவர் பாரி. இவர் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு போலி ஆவணங்களை பெற்று கடன் கொடுத்து 27.6 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியன் வங்கியின் சென்னை தெற்கு மண்டல பொது மேலாளர் தரப்பில் சிபிஐயிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், இதுதொடர்பாக 59 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் என 3 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நம்பிக்கை மோசடி, கூட்டுச்சதி என 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT