மர்ம உறுப்புகளை அறுத்து வந்த சைக்கோ கொலைகாரன் சிக்கினான்

0 2596

சென்னையில் ரெட்டேரி பாலத்துக்கு அடியில் படுத்திருந்தவர்களின் மர்ம உறுப்புகளை அறுத்த சைக்கோ கொலைகாரனை போலீசார் கைது செய்தனர். 

கடந்த மாதம் 26ஆம் தேதி அன்று, கொளத்தூரைச் சேர்ந்த அஸ்லாம் பாஷா என்பவர் ரெட்டேரி பாலத்துக்கு அடியில் உறங்கிக் கொண்டிருந்த போது அவரது மர்ம உறுப்பு அறுக்கப்பட்டது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் ஸ்டான்லி மருத்துமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குடும்பத் தகராறு காரணமாக அஸ்லாம் தனக்கு தானே இப்படி செய்து கொண்டதாக இறப்பதற்கு முன் அவர் போலீசாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தற்கொலை முயற்சி என்ற கோணத்தில் மாதவரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால் அடுத்த சில தினங்களில் அதே பாலத்துக்கு அடியில் நாராயணன் என்பவரும் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்த அவருக்கு தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரிடம் நடத்திய விசாரணையில் தன் பாலின சேர்க்கைக்கு ஒருவன் அழைத்ததாகவும் அதற்கு மறுக்கவே தனது உறுப்பை அறுத்து விட்டதாகவும் போலீசிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

அஸ்லாம் பாஷாவுக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடித்த போலீசார் சைக்கோ கொலைகாரனைத் தேடி வந்தனர். ரெட்டேரி பாலப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்த போது சைக்கோ கொலைகாரன் அடையாளம் காணப்பட்டான்.

4 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்திய மாதவரம் போலீசார், சைக்கோ கொலைகாரனை இன்று கைது செய்தனர். விசாரணையில் அவன் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த முனுசாமி என்பதும், ரெட்ரேரியில் அறை எடுத்து தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments