கனடாவில் திமிங்கலம், டால்பின்கள் வளர்க்க தடை விதித்து சட்டம்

0 358

திமிங்கலம் மற்றும் டால்பின்களை தனியார்கள் வளர்ப்பதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் கனடா அரசு தடை விதித்துள்ளது.

இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு ஏதுவாக ஃப்ரீ வில்லி என்ற புதிய சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் படி தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் யாரும் திமிங்கலங்கள் மற்றும் டால்பின்களை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை வளர்ப்பதற்கும் இனப்பெருக்கம் செய்ய பயன்படுத்துவதற்கும் முற்றிலும் தடை விதிக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனை மீறுபவர்களுக்கு இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் எனவும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments