சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் விடிய விடிய போராட்டம்

0 381

சீனாவின் புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஹாங்காங்கில் விடிய விடிய போராட்டம் நடந்து வருகிறது.

இங்கிலாந்தின் பிடியில் இருந்த ஹாங்காங் கடந்த 1997ம் ஆண்டு சீனா வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தை சீனா கொண்டு வந்துள்ளது.

ஆனால் தங்கள் நிலப்பகுதியில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஹாங்காங் எல்லைக்குள் விசாரிக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இரவில் கொட்டும் மழையிலும் ஏராளமான மக்கள் சீனாவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments