நடிகர் சங்க தேர்தலை நல்லபடியாக நடத்தி முடிக்க வேண்டும்: விஜய் சேதுபதி

0 823

சினிமாவை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளதால், நல்லபடியாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், சிந்துபாத் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சங்கத்தின் தேர்தல் குறித்து இரு அணிகளாக  போட்டி போடுகின்ற ஒரு அணி மட்டும் தம்மிடம் வந்து பேசியதாக தெரிவித்தார். 

சினிமா தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கு, தேர்ந்தெடுக்கப்படும் புதிய நிர்வாகிகள்  வழி வகுக்க வேண்டும் என்றும் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டிருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments