இரு பிரிவினருக்கிடையே நடந்த மோதலில் 95 பேர் பலி

0 2490

மாலியில் இரு தரப்பினரிடையே நடந்த மோதலில், ஒரே இரவில் 95 பேர் உயிரிழந்தனர். மாலியில் உள்ள டோகன் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கும், அப்பகுதியை சேர்ந்த ஃபுலானி பிரிவுனருக்கும் அடிக்கடி மோதல் இருந்து வருகிறது.

இதில் ஜனவரி முதல் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை இரவு, டோகன் கிராமத்தை முற்றுகையிட்ட சிலர், கிராம மக்களின் வீடுகளை தீயிட்டு கொளுத்தினர்.

வெப்பம் தாங்காமல் அலறியடித்து மக்கள் வெளியே வந்ததில் 95 பேரை அந்த கும்பல் சுட்டு கொன்றதாக சொல்லப்படுகிறது. இந்த கோர தாக்குதலுக்கு ஃபுலானி பிரிவினர் தான் காரணம் என டோகான் கிராம தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தாக்குதல் நடந்த இடத்தை பார்வையிட்ட மாலி அதிபர் இப்ராகிம் பவுபாக்கர் கெய்டா ((Ibrahim Boubacar Keita )), பழிதீர்க்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments