தீவிரவாத அமைப்பை விரிவுப்படுத்த சர்வதேச பாபர் கால்சா தீவிரவாத அமைப்பு திட்டம்

0 292

பிரிட்டன் முழுவதும் தனது தீவிரவாத அமைப்பை விரிவுப்படுத்த சர்வதேச பாபர் கால்சா தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

காலிஸ்தானி தீவிரவாத அமைப்பான சர்வதேச பாபர் கால்சா அமைப்பு, பிர்மிங்கம், தெர்பே மற்றும் கவன்ட்ரி உள்ளிட்ட இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

இந்நிலையில் பிரிட்டனில் தடம் பதித்துள்ள இந்த தீவிரவாத அமைப்பு,  அங்குள்ள சீக்கியர்களை மூளைசலவை செய்து, இந்தியாவுக்கு எதிராக திருப்பவும் திட்டமிட்டுள்ளது.

இதற்கென பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பு நிதி உதவி வழங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் காலிஸ்தான் ஆதரவு பிற தீவிரவாத அமைப்புகளையும் உலக நாடுகளில் விரிவுப்படுத்தி கிளர்ச்சியை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT