சாப்பிடும்போது செல்போனை தவிர்த்தால் பீட்சா இலவசம்

0 460

உணவு உண்ணும்போது செல்போன்களை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, இலவச பீட்சா வழங்கப்படும் என, அமெரிக்காவில் இயங்கிவரும் உணவகம் ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கலிபோர்னியாவில், தி கரி என்ற பெயரில் இயங்கிவரும் அந்த பீட்சா நிறுவனம், சாப்பிடும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து, உடன்வருவோருடன் வாடிக்கையாளர்கள் நேரத்தை செலவிடுவதை ஊக்குவிக்கும் வண்ணம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, குறைந்தபட்சம் 4 பேர் கொண்ட குழுவாக வந்து செல்போன் பயன்படுத்தாமல் சாப்பிடும் பட்சத்தில் இலவச பீட்சாவை பெற முடியும்.இலவச பீட்சாவை உணவகத்துக்கு மறுமுறை உணவு உண்ண வரும்போது பெற்றுக்கொள்ளும் வசதியையும் அந்நிறுவனம் வழங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT