டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி பணம் பறிப்பு

0 520

திருப்பூரில் வங்கிக்கு காரில் சென்ற டாஸ்மாக் மேற்பார்வையாளரை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டி, விற்பனை தொகை இரண்டரை லட்சம் ரூபாயை பறித்து சென்ற கும்பலை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

நாதம்பாளையம் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளராக யுவராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்றைய விற்பனை தொகையான இரண்டரை லட்சம் ரூபாயை, பூலுவப்பட்டி சிக்னல் அருகே உள்ள வங்கியில் செலுத்துவதற்காக, அங்கு காரில் சென்றுள்ளார்.

காரில் இருந்து இறங்கிய போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், யுவராஜின் கையில் அரிவாளால் வெட்டிவிட்டு பணத்தை பறித்துச் சென்றனர்.

காயம் அடைந்த யுவராஜூக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சியை கைப்பற்றி அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments