சட்டவிரோத சாய ஆலைகள் இடித்து அகற்றம் - மின்சாரம் துண்டிப்பு

0 599

சேலத்தில் குடியிருப்புப் பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சாய ஆலைகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

சேலம் குகை பகுதியில் உள்ள குடியிருப்புகள் சிலவற்றில் சட்டவிரோத சாய ஆலைகள் இயங்கி வருகின்றன என்றும் அவை சாயக்கழிவுகளை நீர்நிலைகளில் திறந்துவிடுகின்றன என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்குப் புகார் வந்தது.

அப்பகுதிக்கு திடீரெனச் சென்ற அதிகாரிகள், தாங்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துச் சென்ற சாய ஆலைகள் மீண்டும் இயங்கி வருவதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து சாய ஆலைக்குள் இருந்த மூலப் பொருட்களை அப்புறப்படுத்தியதுடன், அங்கிருந்த தொட்டிகள், ஸ்லாபுகள் உள்ளிட்டவற்றையும் ஆட்களைக் கொண்டு இடித்து அகற்றினர்.

புவனா டையிங், ஸ்ரீ வேணி டையிங், RMV டையிங், ATK டையிங், அர்த்தநாரி டையிங், மாதேஷ் டையிங் ஆகிய சாய ஆலைகளின் மின்சாரத்தை துண்டித்த அதிகாரிகள், உட்கட்டமைப்புகளை இடித்து அகற்றினர்.

விவசாய நிலங்களுக்கு அருகிலோ, குடியிருப்புகளுக்கு மத்தியிலோ இதுபோன்று சட்டவிரோதமாக இயங்கும் சாய ஆலைகள் கண்டறியப்பட்டு இடித்து அகற்றப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments