நாடகக் கலைஞர்களை இழிவுபடுத்தும் வகையில் பாக்யராஜ் அணி பேச்சு - கருணாஸ் குற்றச்சாட்டு

0 532

சுவாமி சங்கரதாஸ் அணியில் இடம்பெற்றுள்ள பாக்யராஜ் உள்ளிட்டோரை, நடிகர் சங்க தேர்தலில் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் சங்க தேர்தலில் காசு வாங்கிக் கொண்டு வாக்களிப்பவர்கள் என நாடக கலைஞர்களை பாக்யராஜ் அணியினர் இழிவுபடுத்திவிட்டதாக குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளதாகவும், ஆதாரங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளதாகவும் கருணாஸ் தெரிவித்தார். தேவைப்பட்டால் வழக்கறிஞர்கள் மூலமாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர் கூறினார்.

பாக்யராஜ் அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசரி கணேஷ், நலிந்த நாடகக் கலைஞர்களுக்கு செய்து வரும் உதவி குறித்து
தவறான தகவலை தெரிவித்து வருவதாகவும் கருணாஸ் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments