இயக்குநர் பா. ரஞ்சித் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு

0 2469

மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து அவதூறாகப் பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5ஆம் தேதி கும்பகோணம் அருகே நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டம் ஒன்றில் பேசிய ரஞ்சித், ராஜராஜ சோழன் ஆண்ட காலத்தில் தலித்துகளின் விளைநிலங்கள் பறிக்கப்பட்டதாகவும், 400க்கும் மேற்பட்ட பெண்கள் விலைமாதர்களாக மாற்றப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இதற்கு பல தரப்பிலும் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் தாமாக முன்வந்து அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதேபோல் இந்து மக்கள் கட்சியின் சார்பில் டி.எஸ்.பியிடம் கொடுக்கப்பட்ட புகாரும் திருப்பனந்தாள் காவல்நிலையத்துக்கு மற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments