நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை சரத்குமார், ராதாரவி முறைகேடாக விற்றதாக விஷால் புகார்

0 1116

டிகர்கள் ராதாரவி, சரத்குமாருக்கு எதிரான நடிகர் சங்க நில முறைகேடு புகார் குறித்து நடிகர் விஷால் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சில ஆவணங்களை அளித்து விளக்கமளித்து வருகிறார். 

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே வேங்கடமங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான, 26 சென்ட் நிலத்தை, சங்கத்தின் தலைவராக இருந்த சரத்குமார், பொதுச்செயலராக இருந்த ராதாரவி உள்ளிட்ட நான்கு பேர் முறைகேடாக விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் விஷால், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். ஆனால் விசாரணை சரியாக நடைபெறவில்லை என்று உயர்நீதிமன்றத்தை நாடவே, 3 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய குற்றபிரிவு போலீசுக்கு உத்தரவிடப்பட்டது.

இதை அடுத்து சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் இருவரும் ஆஜராகி விளக்கம் அளிக்க கடந்த மாதம் உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை அவர்கள் ஆஜராகி எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விசாரணைக்கு தேவையான உரிய ஆவணங்களை நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய விஷாலுக்கு உத்தரவிடப்பட்டது. இதை அடுத்து 3 பைகள் நிறைய ஆவணங்களுடன் இன்று விஷால், குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜரானார். அவரிடம் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் தென்னரசு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments