நடிகர் சங்க தேர்தல் -இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை

0 543

நடிகர் சங்க தேர்தலில், வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. வரும் 23 ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 8ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.

பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

image

சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜூம், செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், பொருளாளர் பதவிக்கு பிரசாந்தும், துணைத் தலைவர்கள் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. நடிகர் சங்க தேர்தலை நடத்தும் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் வேட்புமனுக்களை பரிசீலிக்கிறார். வரும் 14 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments